காங்கிரஸ் தலைவர்களின் முட்டாள் தனமான முடிவுகளால், இந்திய ராணுவம் விழி பிதுங்கி நிற்கிறது. பிள்ளையார் பிடிக்க போய் குரங்காக மாறிய இலங்கை விவகாரத்தால் இந்திய ராணுவ தளபதி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பறந்து கொண்டிருக்கிறார்.
தானும் படுக்கமாட்டான் தள்ளியும் படுக்கமாட்டான் என ஈழ தமிழர் விவகாரத்தை சுமுகமாகவும் முடிக்க தெரியாமல், உலக நாடுகளையும் அண்ட விடாமல் இலங்கையிடம் பொடதியில் அடிவாங்கி கொண்டிருக்கிறது காங்கிரஸ் அரசு.
சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் இலங்கையில் அதிகரித்து செல்லும் இந்த சூழ்நிலையில் தன் கைவிட்டு போய்விட்ட இலங்கையை வழிக்கு கொண்டுவர காங்கிரஸ் அரசு தனது வெளியுறவு செயலாளர், ராணுவ தளபதி என முக்கிய அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி தன்னை நிலைப்படுத்த நினைக்கிறது.
ஆனால் இலங்கையின் எண்ணமோ நீ செய்த உதவிக்கு தொழில் வாய்ப்புகளை தருகிறேன் ஆனால் நான் சீனாவுக்குத்தான் வைப்பாட்டியாக இருப்பேன் என காங்கிரஸ் பத்தினியின் தூதர்களிடம் சொல்லாமல் சொல்லிவிட்டது..
ஏற்கனவே காஷ்மீர் எல்லையில் சீன ராணுவம் என அமெரிக்கா கிலியை கிளப்பியுள்ளது.
நேபாளத்தில் சீனாவும் மாவோயிஸ்ட்களும் கோடியாக கொட்டி அரசியல்வாதிகளை பிடிக்கிறார்கள் என ஒலி நாடா வெளியாகியுள்ளது.
உள்நாட்டில் மாவோயிஸ்ட்களின் எல்லை விரிவடைந்து வருகிறது.
காமன்வெல்த் போட்டிகளில் ஊழல், வீரர்கள் ஊக்கமருந்து புகார், வீரர் மீது தாக்குதல் என அயல் நாடுகளில் இந்தியாவின் புகழ் வெகு வேகமாக பரவிவருகிறது.
என்ன நடந்தாலும் சரி நமக்கு ஓடிப்போக இத்தாலி இருக்கும் வரை நமக்கு கவலை இல்லை - இது தான் காங்கிரஸ்
வாழ்க காங்கிரஸ்..!!! வாங்குக பொடதியில் அடி..!!!!
No comments:
Post a Comment