
இன்று மாலை சென்னையில் நடைபெற்ற புத்தக வெளீயீட்டு விழாவில் வைகோ இந்திய பிரதமருக்கு எழுதிய இலங்கைக்கு ராணுவ உதவிகளை நிறுத்த வேண்டும் & தமிழக மீனவர்களை துன்புறுத்தும் இலங்கையை கட்டுப்படுத்தக்கூடிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு விடுத்த வேண்டுகோள்களை பற்றிய விரிவான கடிதங்களின் தொகுப்பு மற்றும் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களின் விரிவான தொகுப்பு "குற்றம் சாட்டுகிறேன்" புத்தகம் ஐயா. நெடுமாறன் வெளியிட கவிஞர் இன்குலாப் பெற்றுக்கொண்டார்.
ஈழப்போராட்டத்தில் மனித உரிமைகளை மீட்டெடுக்கும் நெடிய போராட்டத்தின் ஆவணமாக இப்புத்தகம் இருக்கும். இந்த வெளீயீட்டு நிகழ்வில் கம்யூனிச தலைவர் திரு.மகேந்திரன் மற்றும் பெரியார் தி.க விடுதலை ராஜேந்திரன் மற்றும் நாஞ்சில் சம்பத் ஆகியோர் உறையாற்றினர்.
நாஞ்சில் சம்பத் பேசும்போது ஈழ விவகாரத்தில் தமிழக அரசின் அடக்குமுறையை பற்றி அவருக்கேயுரிய பாணியில் பேசினார்.
திரு.மகேந்திரன் பேசும்போது சீனா, கீயூபா, வியட்னாம் நாடுகளின் ஈழ நிலைப்பாட்டை விமர்சனம் செய்தார், மேலும் அவற்றை மாற்றுவதர்க்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
திரு விடுதலை ராஜேந்திரன் அவர்கள் பேசும்போது இளைஞர்கள் மிகப்பெரிய அளவில் ஈழ விவகாரத்தில் ஈடுபட வேண்டும் என்று இளைஞ்சர்களை கேட்டுக்கொண்டார். இதற்க்கு பெரிய அளவில் கூட்டத்தில் இருந்த இளைஞர்களிடம் ஆரவாரமான வரவேற்ப்பு இருந்தது.
கவிஞர் இன்குலாப் பேசும்போது விடுதலை ராஜேந்திரன் தெரிவித்த கருத்துகளை ஏற்றுபேசினார். பாரதிதாசன் கவிதைகளை முன்னிறுத்தி பேசியது நிறைவாக இருந்தது.
ஐயா நெடுமாறன் அவர்கள் பேசிய கருத்துகள் இந்திய அரசின் வெளியுறவுக்கொள்கைகளின் ஓட்டைகளையும், இதனால் இந்தியா வரும் காலங்களில் மிக கடினமான பிரச்சினைகளை சந்திக்க இருப்பதையும் தெளிவான, ஒரு சிறந்த குடிமகனின் தொலைநோக்கு பார்வையுடன் சிறப்பாக அமைந்தது. தேசிய தலைவரின் இருப்பை உறுதி செய்யும் வகையில் அவரின் பேச்சு அமைந்திருந்தது. வரும் 19 தேதி ஈழத்தமிழர் பாதுகாப்பு பேரவையின் கூட்டத்தில் தெளிவான செயல் திட்டம் வெளியிட உள்ளதையும் தெறிவித்தார்கள்.
தனது ஏற்புறையின் போது வைகோ அவர்களின் பேச்சில் அனல் தெறித்தது. இந்திய அரசின் செயல் பாடுகளையும், கருணாநிதியின் கீழ்த்தரமான துரோக செயல்களையும் தனது பேச்சில் உணர்ச்சிமயமாக எடுத்துரைத்தார்.
மொத்தத்தில் ஈழ விவகாரத்தில் துரோகம் செய்தவர்களுக்கும், மனித உரிமையை மீறிய கயவர்களுக்கும் தண்டனைக்கான கவுன்டவுன் தொடங்கிவிட்டது என்பதையே குற்றம் சாட்டுகிறேன் புத்தக வெளியீட்டு நிகழ்வு காட்டியது என்பதை மறுக்க முடியாது.
இந்த நிகழ்ச்சியின் ஒலி வடிவினை நாளை இணைக்கின்றேன்..