Monday, September 6, 2010

காங்கிரஸ் - தானும் படுக்கமாட்டான் தள்ளியும் படுக்கமாட்டான்

காங்கிரஸ் தலைவர்களின் முட்டாள் தனமான முடிவுகளால், இந்திய ராணுவம் விழி பிதுங்கி நிற்கிறது.

பிள்ளையார் பிடிக்க போய் குரங்காக மாறிய இலங்கை விவகாரத்தால் இந்திய ராணுவ தளபதி இலங்கைக்கும் இந்தியாவுக்கும் பறந்து கொண்டிருக்கிறார்.

தானும் படுக்கமாட்டான் தள்ளியும் படுக்கமாட்டான் என ஈழ தமிழர் விவகாரத்தை சுமுகமாகவும் முடிக்க தெரியாமல், உலக நாடுகளையும் அண்ட விடாமல் இலங்கையிடம் பொடதியில் அடிவாங்கி கொண்டிருக்கிறது காங்கிரஸ் அரசு.

சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் இலங்கையில் அதிகரித்து செல்லும் இந்த சூழ்நிலையில் தன் கைவிட்டு போய்விட்ட இலங்கையை வழிக்கு கொண்டுவர காங்கிரஸ் அரசு தனது வெளியுறவு செயலாளர், ராணுவ தளபதி என முக்கிய அதிகாரிகளை இலங்கைக்கு அனுப்பி தன்னை நிலைப்படுத்த நினைக்கிறது.

ஆனால் இலங்கையின் எண்ணமோ நீ செய்த உதவிக்கு தொழில் வாய்ப்புகளை தருகிறேன் ஆனால் நான் சீனாவுக்குத்தான் வைப்பாட்டியாக இருப்பேன் என காங்கிரஸ் பத்தினியின் தூதர்களிடம் சொல்லாமல் சொல்லிவிட்டது..

ஏற்கனவே காஷ்மீர் எல்லையில் சீன ராணுவம் என அமெரிக்கா கிலியை கிளப்பியுள்ளது.

நேபாளத்தில் சீனாவும் மாவோயிஸ்ட்களும் கோடியாக கொட்டி அரசியல்வாதிகளை பிடிக்கிறார்கள் என ஒலி நாடா வெளியாகியுள்ளது.

உள்நாட்டில் மாவோயிஸ்ட்களின் எல்லை விரிவடைந்து வருகிறது.

காமன்வெல்த் போட்டிகளில் ஊழல், வீரர்கள் ஊக்கமருந்து புகார், வீரர் மீது தாக்குதல் என அயல் நாடுகளில் இந்தியாவின் புகழ் வெகு வேகமாக பரவிவருகிறது.

என்ன நடந்தாலும் சரி நமக்கு ஓடிப்போக இத்தாலி இருக்கும் வரை நமக்கு கவலை இல்லை - இது தான் காங்கிரஸ்

வாழ்க காங்கிரஸ்..!!! வாங்குக பொடதியில் அடி..!!!!

Thursday, June 17, 2010

சீமான் நீங்கள் யார்..? உங்கள் நோக்கம் என்ன..? பாகம்1



இந்த பதிவின் நோக்கம் யாரையும் 
ங்கபடுத்துவதர்க்கு இல்லை. ஆனால் ஈழ தமிழர்களின் வாழ்க்கையில் விளையாடிய(டும்) கருணாக்களின் செயல்களால் விளையும் ஒரு சந்தேகம்.. 


நிச்சயமாக உங்களை சந்தேகப்படுவதற்கு சில காரணங்கள் உள்ளன.. நீங்கள் நிச்சயமாக நெருப்பாற்றில் நீந்தி உங்களை வெளிக்காட்ட வேண்டும் என்பதே இந்த பதிவின் நோக்கம்.. 

துரோகத்தால் பெரும் இழப்புகளை சந்தித்து கொண்டிருக்கும்  ஈழ தமிழர்களின் வாழக்கையில் மீண்டும் ஒரு நம்பிக்கை துரோகம் ஏற்படக்கூடாது என்பதற்காகவும் இந்த பதிவிற்கு நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும்.. அதுவரை நான்மட்டும் அல்ல ஈழ தமிழர்களுக்கும் & ஆதரவாளர்களும் உங்களை உற்று கவனித்துவரும் என்னை போன்ற நோக்கர்களுக்கும் சந்தேகம் இருக்கத்தான் செய்யும்..





சந்தேகங்கள் & கேள்விகள் :

நாம் தமிழர் இயக்கத்தின் நோக்கம் என்ன..?

தமிழக அரசியலில் கருணாநிதியை பற்றிய உங்கள் கருத்து என்ன..?

ஈழ விசயத்தில் கருணாநிதியை பற்றிய உங்கள் கருத்து என்ன..?

யாருடைய கொள்கைகளை எதிர்த்து நீங்கள் அரசியல் செய்ய போகிறீர்கள்..?

அல்லது எந்த கொள்கைக்காக நீங்கள் போராட போகிறீர்கள்..?

நாம் தமிழர் இயக்கம் என்பது சிபா.ஆதித்தனார் ஏற்படுத்திய இயக்கம். நீங்கள் ஏன் அதை தேர்ந்து 
எடுத்தீர்கள்..?

காங்கிரஸ் கட்சியை எதிர்க்கும் அளவுக்கு திமுகவையும் எதிர்க்க கூடிய காரணங்கள் இருக்கிறது என்பதை ஏற்று கொள்கிறீர்களா..?

நெடுமாறன் பற்றிய உங்கள் கருத்து என்ன..?

வைகோவை பற்றி உங்கள் கருத்து என்ன..?

நெடுமாறன், வைகோ உடன் இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரவையில் இணைந்து செயல்படுவதில் 
உங்களுக்கு இருக்கும் தயக்கம் என்ன..?

முல்லை பெரியாருக்காக நெடுமாறன், வைகோ, கம்யுனிஷ்ட்கள் மற்றும் கொள்கைகளில் முரண்பட்ட பெரியார் திக, முஸ்லிம் கட்சி, இந்து மக்கள் கட்சி போன்றவர்கள் எல்லாம் கைகோர்த்து தமிழ்நாடு என்ற உணர்வில் மிகப்பெரிய அளவில் மறியல் போராட்டம் நடத்திய போது, நீங்கள் ஏன் கை கோர்க்கவில்லை. 

கண்டிப்பாக இந்த போராட்டத்தில் வாக்கு அரசியல் இல்லை.. ஏன் என்றால் அதில் கலந்துகொண்ட சில அமைப்புகள் மற்றும் சில தலைவர்கள் தேர்தல்களில் பங்கு பெறுவதே இல்லை.. 

இணைய தளங்களில் நாம் தமிழர்களின் தொண்டர்கள் என்கிற பெயரில் வைகோ மற்றும் நெடுமாறனை மட்டம் தட்டுவதிலும், கலங்கப்படுத்துவதிலும் குறியாக இருப்பதின் நோக்கம் என்ன.. 

தமிழர் விவகாரியங்களில் வைகோவின் நிலைப்பாடு எந்த காலத்திலும் மாறியது இல்லை, மாறப்போவதும் இல்லை.. அதுவும் ஈழ விசயத்தில் அவர் அளவுக்கு கஷ்டப்பட்ட தலைவர் ஒருவரும் இந்தியாவில் இல்லை.. இது எதிரிக்கும் தெரியும்.. 

அப்படி இருக்கையில் உங்களது நுண்ணரசியல் வைகோவை மட்டம் தட்டுவதில் குறியாக இருப்பதன் நோக்கம் என்ன..? 

நீங்கள் கனடாவில் கைது செய்யப்பட்டதும் இந்தியாவில் வந்து இறங்கியதும் உங்கள் தொண்டர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதும் ஏன் ஒரு நாடகமாக இருக்ககூடாது.. 

இந்த விசயத்தில் நீங்கள் கனிமொழியை தொடர்பு கொண்டதாக வரும் செய்திகளுக்கு உங்கள் பதில் என்ன.. 

இந்திய திரைப்பட விழாவுக்கு எதிரான போராட்டங்களும் அதன் விளைவுகளும் ஏன் திட்டமிட்டவையாக இருக்ககூடாது.. ஈழ விசயத்தில் தமிழத்தில் பிளவை உண்டாக்க உங்களை முன்னிலை படுத்த ஏன் சிலர் திட்டமிட்டு இந்திய திரைப்படவிழாவை வழுவிழக்க செய்து உங்களால் கிடைத்த வெற்றி என்று கொண்டாடவேண்டும்.. 

இதனால் ஈழ ஆதரவாளர்களை உங்கள் பக்கம் திருப்பி போராட்டத்தின் வீரியத்தை செயல் இழக்க செய்யும் நோக்கத்தில் உங்களையும் நாம் தமிழர் இயக்கத்தையும் பயன்படுத்தி இருக்ககூடாது..
இந்திய திரைப்பட விழா தோல்வி அடைந்ததில் நிச்சயமாக இந்திய, தமிழக  அரசுக்கு ஒரு நஷ்டம் இல்லை.
ஆனால் ஈழ போராட்ட வாதிகளுக்கு வெற்றி, அதற்கு காரணம் நீங்கள் என்ற போர்வையில் உங்களை இனிவரும் காலங்களில் போராட்டங்களில் முன்னிறுத்தி போராட்டத்தை மட்டுப்படுத்த ஏன் இந்திய, தமிழக அரசுகள் இந்த தற்காலிக தோல்வியை வழிய ஏற்படுத்தி  இருக்ககூடாது..

இதையும் பாருங்கள் - மாமியார் உடைத்தால் மண்குடம்… சீமான் உடைத்தால்?
தொடர்ந்து எழுதுவேன்...

Thursday, May 27, 2010

பதிவுலக நண்பர்களுக்கு ஓர் அவசர அன்பான வேண்டுகோள்


கேரளா அரசு அக்கிரமத்தால் முல்லை பெரியாரில் 2, 17,000 ஏக்கர் பாசன உரிமையை இழக்கும் அபாயம், 65 லட்சம் மக்கள் குடிநீரை இழக்க நேரும் துயரம்.. மே 28 அன்று கோவை செல்லும் பாதைகளை மறித்து அறவழியில் நடத்தும் போராட்டம். வைகோ அவர்கள் கடந்த 6 மாதங்களாக 600 கிராமங்களில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி உள்ளார்கள். இதற்கு வீட்டுக்கு ஒருவர் செல்ல வேண்டும். முடியாதவர்கள் தங்கள் சார்பில் அனுப்பி வைக்க வேண்டும். இது கட்சி சார்பான போராட்டம் அல்ல. பின் வரும் பட்டியலை பாருங்கள்.
கலந்து கொண்டு ஒவ்வொரு சாலையிலும் தலைமை ஏற்கும் குழு இவர்கள்.
வைகோ மதிமுக பொது செயலாளர் அவர்கள்
பழ.நெடுமாறன் (முல்லைப் பெரியாறு உரிமை மீட்புக் குழு),
கம்பம் கே.எம்.அப்பாஸ், (ஐந்து மாவட்ட முல்லைப் பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம்),
சேக் தாவூத், தலைவர், தமிழ் மாநில முÞலிம் லீக் - குமுளி ரோடு லோயர் கேம்ப் (தேனி மாவட்டம்)
கொளத்தூர் மணி - தலைவர், பெரியார் திராவிடர் கழகம்,
கோவை கு.இராமகிருஷ்ணன் பொதுச்செயலாளர், பெரியார் திராவிடர் கழகம்

அர்ஜூன் சம்பத் -இந்து மக்கள் கட்சி
செ.நல்லுசாமி எம்.ஏ.பி.எல்., (தமிழ்நாடு கள் இயக்கம்),
என்.எஸ்.பழனிசாமி (கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்),
ஆடிட்டர் மு.பாலசுப்பிரமணியம் (விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் பொருளாளர்)
தியாகு- தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்
பெ. மணியரசன் -தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
உ.தனியரசு- மாநில அமைப்பாளர், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை
பி.வி.கதிரவன் -தமிழ் மாநிலப் பொதுச் செயலாளர் அகில இந்திய பார்வர்ட் பிளாக்

இது தமிழக அரசியல் நல்ல ஆரோக்கியமான பாதைக்கு திரும்பும் ஒரு திருப்பு முனை போராட்டம். இந்த போராட்டத்தில் தேர்தல் நோக்கு இல்லை. உரிமையை மீட்டு எடுக்கும் ஒரு ஆரம்பமே. எப்படி சொல்கிறேன் என்றால் இது வரை நடை பெற்ற விழிப்புணர்வு கூட்டங்களில் திமுக அதிமுக கட்சி தொண்டர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.. வலை பதிவு நண்பர்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் தங்கள் பகுதியில் உள்ள உறவினர்கள் நண்பர்கள் செல்வதற்கு ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் விபரங்களுக்கு மதிமுக இணைய தளம்

நன்றி
பாலா

Saturday, April 24, 2010

தமிழர்கள் என்றால் அமிதாப்புக்கு கிள்ளுக்கீரையா?-வைகோ


தமிழர்களின் மரண பூமி ஆக்கப்பட்டு விட்ட இலங்கையில், கொடுமையான கொலைப் பாதகன் ராஜபக்சே ராஜாங்கம் நடத்தும் தலைநகர் கெழும்பில், ஜூன் மாதத்தில் சர்வதேச இந்தியத் திரைப்பட விழா நடைபெற இருப்பது, மேலும் மேலும் தமிழர்களின் உள்ளத்தில் நெருப்பைக் கொட்டுகின்ற செய்தி ஆகும்.

லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, மீதம் இருக்கின்ற தமிழர்களின் கண்ணீர்க் கதறலும், வேதனைப் புலம்பலும், வீசும் காற்றையே ஓலக் காற்றாக ஆக்கிவிட்ட நிலையில், சர்வதேச இந்தியத் திரைப்பட விருது வழங்கும் விழாவை, மூன்று நாட்கள் நடத்த, இந்த அமைப்பின் விளம்பரத் தூதரான நடிகர் அமிதாப்பச்சன் ஏற்பாடு செய்தது தமிழர்களின் தலையிலே மிதிக்கின்ற அக்கிரமம் ஆகும்.

இந்தியாவில், அனைவராலும் மதிக்கப்படுகின்றன கலையுலக நட்சத்திரமான அமிதாப்பச்சன், இப்படி ஒரு செயலில் ஈடுபட்டது கண்டனத்துக்குரியது.

இந்த முயற்சியை அவர் உடனடியாகக் கைவிட வேண்டும். அவர் வசிக்கும் மும்பையிலே தாக்குதல் நடத்தி, நூற்றுக்கணக்கானவர்கள் மடியக் காரணமான பாகிஸ் தானியர்களின் தலைநகரில், இஸ்லாமாபாத்தில், இந்த விழாவை அவர் நடத்தத் தயாரா?.

அப்படி அறிவித்து விட்டு மும்பை நகரில் அவர் நடமாட முடியுமா?.

தமிழர்கள் என்றால் என்ன கிள்ளுக்கீரையா? லட்சக்கணக்கான தமிழர்களைக் கொன்று குவித்ததைக் கொண்டாடப் போகிறார்களா?.

இப்படியெல்லாம், இவர்கள் செயல்படுவதற்கு துணிச்சலைத் தந்ததே இந்திய அரசுதானே?. ராஜபக்சேயை இந்தியாவுக்கு அழைத்து வந்து, திருப்பதியில் பூரண கும்ப வரவேற்புக் கொடுக்க ஏற்பாடு செய்ததால் தானே, இந்தத் துணிவு அனைவருக்கும் வந்து விட்டது?.

கொழும்பிலே உத்தேசிக்கப்பட்ட விழாவை, இந்தியத் திரைப்படத் துறையினர் சார்பில் நடத்தக் கூடாது. இந்த விழாவில் தமிழகத் திரைப்பட துறையைச் சேர்ந்த முன்னணிக் கலைஞர்கள் பங்கேற்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளதாக அறிகிறோம்.

தமிழகத் திரைப்படத் துறையைச் சேர்ந்த எவரும் அதில் கலந்து கொள்ளக் கூடாது என்பதோடு, இந்த விழாவை ரத்து செய்ய வேண்டும் என தமிழகத் திரைப்படத் துறையினர் வெளிப்படையாக அறிக்கை தர வேண்டும்.

அமிதாப்பச்சன் தனது நடவடிக்கைகளைக் கைவிட வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார வைகோ.

Wednesday, September 16, 2009

தென்கச்சி கோ.சுவாமிநாதன் - ஈழத்தமிழர்கள்


கண்கலங்க செய்ய குட்டி கதை தேவை இல்லை.. ஈழத்தமிழர்கள் என்ற ஒரு வார்த்தை போதும். என்ன ஒரு சத்தியமான வார்த்தை.. நெஞ்சு கனக்கிறது உம்போன்ற வார்த்தை சித்தர்கள் எம் சந்ததிக்கு இல்லையே என்று நினைக்கும் போது... எண்ணமும் செயலும் பேச்சும் ஒன்றாக பயணிக்கும் வாழ்க்கை வாழ்ந்த நீங்களும் வள்ளுவரே....

Sunday, September 13, 2009

நாம் பெற்றது கெளரவமான தோல்வி! கருணாநிதி பெற்றது வெட்கக்கேடான வெற்றி!


உலக தமிழர்களே உற்று கவனியுங்கள்.... புதிய எழுச்சியுடன் வைகோவின் தம்பிகள் ஒன்று கூடுவதை.. தோல்விக்கு தோல்வி பயத்தை கொடுக்கும் தன்மான தமிழர்கள் கூட்டம் தன்னை வார்த்தெடுத்த தலைவனின் நூற்றாண்டு நிறைவு விழாவில் சபதம் ஏற்பதை....... அரை வேக்காடுகளின் அரசியலும், சுய நலவாதிகளின் சூத்திரங்களும் முடிவுரைக்கு முன்னுரை எழுதப்படும் மாநாடு.. அனைவரும் வருக...!!!

செப்டம்பர் 15 திருச்சி

Wednesday, July 15, 2009

குற்ற‌ம் சாட்டுகிறேன் ‍ - ‍வைகோ



இன்று மாலை சென்னையில் ந‌டைபெற்ற புத்த‌க‌ வெளீயீட்டு விழாவில் வைகோ இந்திய‌ பிர‌த‌ம‌ருக்கு எழுதிய‌ இல‌ங்கைக்கு ராணுவ உத‌விக‌ளை நிறுத்த‌ வேண்டும் & த‌மிழ‌க‌ மீனவ‌ர்க‌ளை துன்புறுத்தும் இல‌ங்கையை க‌ட்டுப்ப‌டுத்த‌க்கூடிய‌ ந‌ட‌வ‌டிக்கையை மேற்கொள்ளுமாறு விடுத்த‌ வேண்டுகோள்க‌ளை ப‌ற்றிய‌ விரிவான‌ கடித‌ங்க‌ளின் தொகுப்பு ம‌ற்றும் த‌மிழ‌க‌ மீன‌வ‌ர்க‌ள் தாக்க‌ப்ப‌ட்ட‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ளின் விரிவான‌ தொகுப்பு "குற்ற‌ம் சாட்டுகிறேன்" புத்த‌க‌ம் ஐயா. நெடுமாற‌ன் வெளியிட‌ க‌விஞ‌ர் இன்குலாப் பெற்றுக்கொண்டார்.


ஈழ‌ப்போராட்ட‌த்தில் ம‌னித‌ உரிமைக‌ளை மீட்டெடுக்கும் நெடிய‌ போராட்ட‌த்தின் ஆவ‌ண‌மாக‌ இப்புத்த‌க‌ம் இருக்கும். இந்த‌ வெளீயீட்டு நிக‌ழ்வில் க‌ம்யூனிச‌ த‌லைவ‌ர் திரு.மகேந்திர‌ன் ம‌ற்றும் பெரியார் தி.க‌ விடுத‌லை ராஜேந்திர‌ன் ம‌ற்றும் நாஞ்சில் ச‌ம்ப‌த் ஆகியோர் உறையாற்றின‌ர்.


நாஞ்சில் ச‌ம்ப‌த் பேசும்போது ஈழ‌ விவ‌கார‌த்தில் த‌மிழ‌க‌ அர‌சின் அட‌க்குமுறையை ப‌ற்றி அவ‌ருக்கேயுரிய‌ பாணியில் பேசினார்.

திரு.மகேந்திர‌ன் பேசும்போது சீனா, கீயூபா, விய‌ட்னாம் நாடுக‌ளின் ஈழ‌ நிலைப்பாட்டை விம‌ர்ச‌ன‌ம் செய்தார், மேலும் அவ‌ற்றை மாற்றுவ‌த‌ர்க்கு முய‌ற்சிக‌ள் மேற்கொள்ள‌ப்ப‌டும் என்று தெரிவித்தார்.


திரு விடுத‌லை ராஜேந்திர‌ன் அவ‌ர்க‌ள் பேசும்போது இளைஞ‌ர்க‌ள் மிக‌ப்பெரிய‌ அள‌வில் ஈழ‌ விவ‌கார‌த்தில் ஈடுப‌ட‌ வேண்டும் என்று இளைஞ்ச‌ர்க‌ளை கேட்டுக்கொண்டார். இத‌ற்க்கு பெரிய‌ அள‌வில் கூட்ட‌த்தில் இருந்த‌ இளைஞ‌ர்க‌ளிட‌ம் ஆர‌வார‌மான‌ வ‌ர‌வேற்ப்பு இருந்த‌து.


க‌விஞ‌ர் இன்குலாப் பேசும்போது விடுத‌லை ராஜேந்திர‌ன் தெரிவித்த‌ க‌ருத்துக‌ளை ஏற்றுபேசினார். பார‌திதாச‌ன் க‌விதைக‌ளை முன்னிறுத்தி பேசிய‌து நிறைவாக‌ இருந்த‌து.

ஐயா நெடுமாற‌ன் அவ‌ர்க‌ள் பேசிய‌ க‌ருத்துக‌ள் இந்திய‌ அர‌சின் வெளியுற‌வுக்கொள்கைக‌ளின் ஓட்டைக‌ளையும், இத‌னால் இந்தியா வ‌ரும் கால‌ங்க‌ளில் மிக‌ க‌டின‌மான‌ பிர‌ச்சினைக‌ளை ச‌ந்திக்க‌ இருப்ப‌தையும் தெளிவான‌, ஒரு சிற‌ந்த‌ குடிம‌க‌னின் தொலைநோக்கு பார்வையுட‌ன் சிற‌ப்பாக‌ அமைந்த‌து. தேசிய‌ த‌லைவ‌ரின் இருப்பை உறுதி செய்யும் வ‌கையில் அவ‌ரின் பேச்சு அமைந்திருந்த‌து. வ‌ரும் 19 தேதி ஈழ‌த்த‌மிழ‌ர் பாதுகாப்பு பேர‌வையின் கூட்ட‌த்தில் தெளிவான‌ செய‌ல் திட்ட‌ம் வெளியிட‌ உள்ள‌தையும் தெறிவித்தார்க‌ள்.

த‌ன‌து ஏற்புறையின் போது வைகோ அவ‌ர்க‌ளின் பேச்சில் அன‌ல் தெறித்த‌து. இந்திய‌ அர‌சின் செய‌ல் பாடுக‌ளையும், க‌ருணாநிதியின் கீழ்த்த‌ர‌மான‌ துரோக‌ செய‌ல்க‌ளையும் த‌ன‌து பேச்சில் உண‌ர்ச்சிம‌ய‌மாக‌ எடுத்துரைத்தார்.


மொத்த‌த்தில் ஈழ‌ விவ‌கார‌த்தில் துரோக‌ம் செய்த‌வ‌ர்க‌ளுக்கும், ம‌னித‌ உரிமையை மீறிய‌ க‌ய‌வ‌ர்க‌ளுக்கும் த‌ண்ட‌னைக்கான‌ க‌வுன்ட‌வுன் தொட‌ங்கிவிட்ட‌து என்ப‌தையே குற்ற‌ம் சாட்டுகிறேன் புத்த‌க‌ வெளியீட்டு நிக‌ழ்வு காட்டிய‌து என்ப‌தை ம‌றுக்க‌ முடியாது.

இந்த‌ நிக‌ழ்ச்சியின் ஒலி வ‌டிவினை நாளை இணைக்கின்றேன்..